• Feb 03 2025

இளையராஜாவிற்கு தாலி கொடுத்த தயாரிப்பாளர்- ஷாக்கில் இசைஞானி

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளராக விளங்குபவரே இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அத்துடன் இதுவரைக்கும் 1000 ற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பாடியுள்ளதுடன் இந்தியாவில் 2 வது பத்ம பூசன் விருது வாங்கிய பெருமையும் இளையராஜாவையே சேரும்.

இத்தகைய பெருமையுள்ள இளையராஜா தற்போது  தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அவருடைய மனைவியின் தாலியை எடுத்துக் கொண்டு வந்து தனது  அருகில்  நின்றார்.


இளைய ராஜா அதனை பார்த்தவுடன் எதற்கு ஐயா தாலியை கொண்டுவந்து நிற்கிறீங்கள் என்று கேட்ட போது அந்த தயாரிப்பாளர் அதற்கு  நீங்கள் எனது படத்தில் இசையமைத்துக் கொடுத்ததற்கு  உங்களுக்கு தருவதற்கு என்னிடம் பணம் இல்லை அதுதான் மனைவியின் தாலியை எடுத்து கொண்டு வந்திருக்கிறேன் என்றார். 

இதனை கேட்டவுடன் நான் முதலில் இந்த இடத்தில் இருந்து செல்லுங்க என்று கூறி  அவரை அனுப்பி விட்டதாக தெரிவித்தார். அத்துடன் அந்த தயாரிப்பாளர் இப்படி செய்தது எனக்கு மிகவும் கவலையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement