தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஸ்வேஷ்வர ராவ், சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியல்களும் நடித்து புகழ்பெற்றவர். இவர், தனது சினிமா வாழ்க்கையை எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவே தொடங்கியுள்ளார்.
விக்ரம் - சூர்யா நடிப்பில் வெளியான 'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பாவாக அந்த கேரக்டரில் இவர் நடித்துள்ளார். இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி விஸ்வேஸ்வர ராவ், தெலுங்கு திரைப்படங்களில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என காமெடியில் புகழ்பெற்ற நடிகரான விஸ்வேஸ்வர ராவ் தனது 62 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் தமிழ்த் திரையுலகிற்கு பேரதிர்ச்சியாக கிடைத்துள்ளது.

மேலும் இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது அவரது உடல் அஞ்சலிக்காக சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்து ஒரு வாரத்திற்குள் நகைச்சுவை நடிகர் சேசு, டேனியல் பாலாஜி தற்போது விஸ்வேஸ்வர ராவ் என தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் ஜொலித்த பிரபலங்களின் உயிரிழப்பு ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                              
                             
                             
                            _660bd336eaa0a.jpg) 
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!