• Mar 20 2026

ஒரே பிரேமில் இரண்டு சிங்கங்கள்... வெளியானது ‘KHxRK’ படத்தின் மிரட்டலான போஸ்டர்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துவரும் மிகப்பெரிய கூட்டணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘KHxRK’ திரைப்படம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியான தருணத்திலிருந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.


இந்நிலையில், இப்படத்தை தயாரித்து வரும் Red Giant Movies நிறுவனம், ‘KHxRK’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய சில நிமிடங்களிலேயே வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். இருவரின் முகபாவனைகளிலும் தீவிரம் தென்படுகிறது என்று கருத்துத் தெரிவித்துவருகின்றனர். 

Advertisement

Advertisement