தென்னிந்திய திரையுலகின் மிக முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் Filmfare Awards South நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 21) கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களின் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் இந்த விழா, இந்த ஆண்டும் திரையுலக நட்சத்திரங்களின் ஒளிவிழாவாக மிளிர்ந்தது.

இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் கடுமையான போட்டி நிலவியது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்த பிரிவுகளில் ஒன்றான “முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர்” விருது, இந்த ஆண்டு அமரன் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அமரன் திரைப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன். உணர்ச்சி, தைரியம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் அவர் நடித்த விதம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.
விருது பெற்ற பின் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
அவர் அதன்போது, “எனது ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை எவ்வளவு அடித்து துவைச்சாலும்… மிதிச்சாலும்… என்னை தொடர்ந்து தூக்கி, தூக்கி மேடையில் நிற்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.” என்று கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளன.
Listen News!