• Mar 23 2025

'வீர தீர சூரன்' படத்துடன் மோதவுள்ள மலையாள திரைப்படம்...! தியட்டர் அதிரப்போவது நிச்சயம்..!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகம் தற்போது எதிர்பார்க்கும் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் 'வீர தீர சூரன்' மற்றும் 'எம்புரான்' போன்ற படங்கள் அதிரடியாக ரிலீஸாக உள்ள நிலையில் தற்பொழுது அவற்றுக்கிடையில் மோதல்கள் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


'வீர தீர சூரன்' படம், ஒரு பழங்கால வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படம் மார்ச் 27ம் திகதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புக் காணப்பட்டது.

மேலும் பிரித்விராஜ் இயக்கியுள்ள 'எம்புரான்' படம் 'லூசிபர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகின்றது. இதில் மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.



தற்பொழுது இரண்டு படங்களுமே மார்ச் 27 அன்று ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்களிடையே போர் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement