"oh my kadavule" பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய "டிராகன் " திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப் படத்தின் இயக்கம் பாடல்கள் பிரதீப் ரங்கநாதன் ,அனுபமா ,கஜாடு போன்றவர்களின் நடிப்பு மக்களிற்கு நல்ல பொழுதுபோக்கினை வழங்கியது. இந்த நிலையில் படம் வெளியாகிய முதல் நாளே அஷ்வத் மீண்டும் பிரதீப்பை வைத்து படம் இயக்குவதாக கூறியிருந்தார்.
தற்போது இவர் சிம்புவின் 50 ஆவது படத்திற்கான வேலைகளில் மிகவும் பிஸியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குநரை பல நடிகர்கள் தேடிச்சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த வரிசையில் சிம்பு படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. தனுஷே இவரை தேடிச்சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இப் படத்தினை அல்லு அர்ஜுனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!