• Jan 19 2025

பீஸ்ட் பட நாயகி வீட்டில் நடந்த முக்கிய விஷேசம்- வெளியாகிய haldi விழா போட்டோஸ்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகை என்றாலும் கடந்தாண்டு இவர் நடித்த படங்கள் வரவேற்பை பெறவில்லை. 


தமிழில் நடித்த பீஸ்ட், தெலுங்கில் நடித்த ராதே ஷ்யாம், ஹிந்தியில் நடித்த சர்க்கஸ் படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்த படங்கள் நடித்த சமயத்தில் மூன்று முதல் மூன்றரை கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார் . 


இப்போது சம்பளத்தையும் குறைத்துள்ளாராம். அத்தோடு கதை தேர்விலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பூஜா ஹெக்டேவின் சகோதரிக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், haldi விழா இன்று நடந்து முடிந்திருக்கிறது.


அதன் புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement