• Jan 19 2025

திருமண பந்தத்தில் இணையவுள்ள வாத்தி திரைப்பட நடிகை- யாரைத் திருமணம் முடிக்கவுள்ளார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தமிழில் களரி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.இதனை அடுத்து  தீவண்டி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.இப்படத்தின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 


இருப்பினும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் மலையாள சினிமாப் பக்கம் சென்று விட்டார். அடுத்து ஒரு யமந்தன் பிரேமாகதா என்னும் படத்தில் நடித்தார்.

இவர் தனது நண்பரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறாராம், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த வருடம் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்து நடிகை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement