• Jan 19 2025

பவதாரணியுடன் இருந்த கடைசி தருணம்... கவலையுடன் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணியின் குரலே தனித்துவம் வாய்ந்தது என்று கூறலாம். தனது குடும்பத்தினரின் இசையமைப்பில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவரின் இறப்பின் பின் குடும்பமே சோக கடலில் மூழ்கியது. இந்நிலையில் வெங்கட் பிரபு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 


அவ்வளவாக கேமரா பக்கம் வராத ஒரு பிரபலம். இவர் உடல்நலக் குறைவால் நீண்ட வருடங்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார், ஒருகட்டத்தில் நோயின் தீவிரம் உணர புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளார். சிகிச்சைக்காக இலங்கை சென்றவர் கடந்த ஜனவரி 25ம் தேதி உயிரிழந்தார். பின் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது அம்மா மற்றும் பாட்டி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 


பவதாரிணி சிகிச்சைக்காக இலங்கை செல்வதற்கு முன் தனது குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து பேசிவிட்டு தான் சென்றார் என கூறப்பட்டது. இந்த நிலையில் வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். பவதாரிணி அனைவரையும் கடைசியாக சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது. வெங்கட் பிரபு பதிவிற்கு கீழ் அனைவரும் பார்க்க அழுகையாக வருகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement