• Jan 18 2025

1 hourக்கு மேல புலி நடிக்காது... அதுக்கு யுவனுக்குத்தான் நன்றி சொல்லணும்... முதல் படத்தில் இவ்வளோ ரிஸ்க்கா... விஜய் டிவி புகழ்

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் புகழ். இவர் இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார்.


இவர் தற்பொழுது  முதல் முறையாக ஹீரோவாக திரைப்படம் நடிக்கவுள்ளார்.  இயக்குநர் ஜெ.சுரேஷ் இயக்கத்தில் “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இப்படத்தில் புலி பராமரிப்பாளராக புகழ் நடித்து வருகிறார். இயக்குநர் சுரேஷ், இத்திரைப்படத்தில் நிஜ புலியை வைத்து படமாக்க வேண்டும் என முடிவு செய்தார்.


இந்தியாவில் அதற்கான அனுமதி இல்லை என்பதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட புலி ஒன்றை  பயன்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர். இந் நிலையில் ஒரு நேர்காணலின் போது “மிஸ்டர் ஜூ கீப்பர்”திரைப்படத்தை பற்றி  கேட்ட போது புகழ் இவ்வாறு கூறியுள்ளார்.


"முதலாவதாக  நான் ஒரு முக்கியமான ஒருவருக்கு பெரிய நன்றி கூற வேண்டும். தல , தளபதி அவங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா அவர்கள் திரையுலகில் உண்மையிலேயே பெரியவர்கள் , ஆனால் நான் இப்ப தான் வந்தேன். புகழ் என்றால் அவ்வளவு பெரிய ஆல் கிடையாது . ஆனாலும் என்னுடைய படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்".

 

"ரொம்ப ஜாலியான மனுஷன், வளர்ந்து வருபவர்களுக்கு ரொம்பவே உதவி செய்வார். இப்படி இந்த மனது யாருக்கு வரும் என்று தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜாவினுடைய  அந்த மனசுக்கு ரொம்ப ரொம்ப பெரிய நன்றிகள்.  மற்றும் இத் திரைப்படத்தில் முக்கியமான விஷயம்  என்றால் உண்மையான புலியை வைத்து தான்  படம் எடுக்கப்பட்டது. கதை கேட்டதும் எனக்கு பிடித்து இருந்தது. நான் நடிக்கிற இந்த படம் தனியா தெரியனும் என்று நினைத்தேன்". 


"உண்மையான புலியை வைத்து ஒரிஜினலாக செய்யனும் என்பதுக்காக நான் படத்தில் நடிக்க விருப்பம் கொண்டேன் . உண்மையான புலியாய் வைத்து நடிக்க போகின்றேன் என்றதும் எனக்கு செம ஹாப்பி. ஒரு மணித்தியாலத்துக்கு மேல புலி நடிக்காது . இன்னொரு புலி மாற்றி கொண்டு வருவாங்க . 300 புலிகள் இருந்தது .ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு புலி என்று மாற்றி மாற்றி நடித்தோம்" என புகழ் சுவாரஷ்யமான பதிலளித்துள்ளார்

Advertisement

Advertisement