2020 ஆம் ஆண்டு நயன்தாரா - ஆர். ஜே பாலாஜி கூட்டணியில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் 2. அதில் அம்மனாக நயந்தாரா அட்டகாசமான நடிப்பை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என பாலாஜி தெரிவித்து இருந்தார்.
அதற்கு பின்பு மூக்குத்தி அம்மன் 2 பாகத்தில் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டதாகவும் அவருக்கு பதிலாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனாலும் மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை சுந்தர். சி இயக்க இருப்பதாகவும், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அதனை தயாரிக்க இருப்பதாகவும் அதிகார்வபூர்வமான அறிவிப்பு வெளியானது.

இதை தொடர்ந்து 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளதாக ஐசரி கணேஷ் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, சினேகா, ரெஜினா, ஊர்வசி, மைனா நந்தினி, அபிநயா மற்றும் யோகி பாபு , சிங்கம்புலி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கான படப் பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் படக்குழு நேற்று வெளியிட்டது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கால விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சுமார் 2000 கலைஞர்களுடன் ஆறு மாதம் மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர். சி தெரிவித்துள்ளார்.
Listen News!