• Jan 26 2026

2026 தல பிறந்தநாளுக்கு ரிலீஸாகும் மாஸான திரைப்படம்.! படக்குழு வெளியிட்ட அதகள அப்டேட்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் குமார், நடிகராக மட்டுமல்லாமல்,  கார் ரேஸ்களிலும் ஈடுபட்டு சாதனை படைத்த அவர், தற்போது தனது வாழ்நாள் லட்சியங்களில் ஒன்றான கார் ரேஸைப் பற்றிய ஆவணப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அஜித்தின் கார் ரேஸிங் பயணத்தை மையமாகக் கொண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் ஆவணப்படம் தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படம் அஜித்தின் வாழ்க்கை, ரேஸிங் ஆர்வம், அணிகளின் வெற்றி மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவ் ஆவணப்படத்திற்கு இசையை ஜி.வி. பிரகாஷ் வழங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர், அஜித்தின் கார் ரேஸிங் அனுபவங்களின் அதிரடி, வேகம் மற்றும் சவால்களை பின்னணி இசையோடு இணைத்து வெளிப்படுத்த உள்ளார்.

படக்குழுவின் உறுதிப்படி, அஜித், ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணியாக இணைந்துள்ளனர். இதன் மூலம் ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். அஜித் ரசிகர்கள் இவரது கார் ரேஸிங் பயணம், வெற்றி , போராட்டங்கள் என்பன ஆவணப்படத்தில் எப்படி வெளிப்படவுள்ளது என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது அதிகாரபூர்வ வெளியீடு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வெளியான தகவல்களின் படி  அடுத்த ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மற்றும் ரேஸிங் ஆர்வலர்கள் இருவருக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement