• Sep 04 2025

"The Game": ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் முதல் தமிழ் தொடர்!நெட்பிளிக்ஸ் எப்போது தெரியுமா?

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடராக "The Game: You Never Play Alone" என்ற புதிய மிஸ்ட்ரி த்ரில்லரை அறிவித்துள்ளது. அக்டோபர் 2, 2025 அன்று வெளியாக உள்ள இந்த தொடர், நம்மை சுற்றியுள்ள டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களை வெளிக்கொணரும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அவர் ஒரு பெண் கேம் டெவலப்பராக நடிக்க, ஒரு மர்மமான டிஜிட்டல் தாக்குதலை ஆராயும் பயணமே இந்த தொடரின் மையமாக இருக்கிறது. தொடர் முழுவதும் டிஜிட்டல் உலகில் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் நுணுக்கமான உளவியல் போராட்டங்கள் கலந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தீப்தி கோவிந்தராஜன் எழுத்தில், ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள இந்த தொடரை Applause Entertainment மற்றும் Netflix India இணைந்து தயாரித்துள்ளன. ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் மற்றும் ஹேமா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


டெக்னாலஜி மற்றும் த்ரில்லர் காதலர்களுக்கான இந்த புதிய தமிழ் தொடர், நவீன பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, பாரம்பரிய கதையாடலுக்குள் புதுமையான பார்வையை கொண்டு வருகிறது. அக்டோபர் 2 அன்று Netflix தளத்தில் வெளியாகும் "The Game: You Never Play Alone" தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள்  காத்துள்ளார்கள்.

Advertisement

Advertisement