• Jan 18 2025

லீக்கானது கோட் திரைப்பட சண்டை காட்சி... விஜய்- பிரசாந்த் இடையில் மோதல்...அதிர்ச்சில் படக்குழுவினர்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தளபதியின் கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படக்குழுவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். 


டி ஏஜிங் தொழில்நுட்பத்தினை இப்படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்த இருக்கிறார். மேலும் இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.


விஜயின் ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படம் வில் ஸ்மித்தின் ஜெமினி மேன் படத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கோட் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்து இருக்கிறார் நடிகர் விஜய்.


இப்படம் விஜயின் கடைசி படமாகவோ, அதற்கு முந்தைய படமாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங்கை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் முடிக்க வேண்டும் என்பதால் படக்குழு ஜெட் வேகத்தில் ஓடி வருகின்றனர். 


இதற்கிடையில் விஜய் மற்றும் பிரசாந்த் இடையேயான ஷூட்டிங் காட்சிகள் லீக்காகி இருக்கிறது. இதில் விஜய் மற்றும் பிரசாந்த் கோபமாக பேசி கொண்டு இருக்கின்றனர். கோட் படக்குழு ஷூட்டிங் பாதுகாப்பாக நடத்தியும் இப்படி நடந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதாம். அந்த காட்சிகளை இணையத்தில் பகிர வேண்டாம் எனவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement