தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு வலிமையான நடிகராக மட்டுமல்லாது, சிறந்த படங்களை தேர்வு செய்யும் நடிகராகவும் பல தளங்களில் தன்னை நிரூபித்திருந்தார். தற்போது அவர் இயக்கியும், கதாநாயகனுமாக செயற்படும் புதிய படம் ‘இட்லி கடை’, தயாரிப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, சென்சார் சான்றிதழினைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது ஒரு குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய, நம்மூர் வாசனை கொண்ட படமாக இருக்கப்போகிறது என்பதற்கே சான்றாகும்.
‘இட்லி கடை’ என்பது ஒரு சாதாரண உணவகத்தை மையமாக கொண்டு, வாழ்க்கையின் சுவைகளை நம்மிடையே பகிரும் ஒரு உணர்வுபூர்வமான, நையாண்டித்தனமான படமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Listen News!