“ஸ்பைடர் மேன்” பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வர, டெஸ்டின் டேனியல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் நடிகர் டாம் ஹாலண்ட் தலையில் காயமடைந்த நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த படப்பிடிப்பில் இடம்பெறும் சண்டை காட்சியின் போது நடந்த விபத்தில் இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் டாம் ஹாலண்டுக்கு, லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், "ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே" படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Listen News!