இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே தனி வரவேற்பு உள்ளது. மார்வெல் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு பதிலளிக்கத் தகுந்த தமிழ்த் திரைப்படங்களும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களும் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் தான் ‘அதிரா’.
ஷரன் கோபிஷெட்டி இயக்கும் இப்படம், ஒரு பிரமாண்டமான சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வருகிறது. இதற்கான மிகப்பெரிய டுவிஸ்ட் என்னவென்றால், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது எஸ்.ஜே. சூர்யா என்பதுதான்!
'அதிரா' என்பது புது முயற்சியாகவும், இந்தியாவின் சூப்பர் ஹீரோ படங்களுக்கான ஒரு புதிய அத்தியாயமாகவும் உருவாகும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தெலுங்கில் உருவாகும் இப்படம், பிற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!