உலகளாவிய ரீதியில் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்தி தற்போது வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம், செப்டம்பர் 11, 2025 அன்று Amazon Prime Video தளத்தில் ஓடிடியில் (OTT) வெளியாக இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
படத்தை இயக்கியது லோகேஷ் கனகராஜ் என்பதால், அவரின் உணர்வுபூர்வமான காட்சிப்பதிவு மற்றும் கதாபாத்திர மேம்பாடு ரசிகர்களை திரை அரங்குகளுக்கே இழுத்து வந்தது. இதற்கு மேலாக, ரஜினியின் மாஸ் கலந்த அவதாரம், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்பொழுது வெளியான ஓடிடி அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
Listen News!