• Jan 18 2025

பெத்த பிள்ளையை கடத்தும் அப்பா.. பள்ளி குழந்தைக்கு கல்யாணம்? எதிர்நீச்சல் சீரியலுக்கு கடுமையான எதிர்ப்பு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். 

ஒரு கூட்டுக் குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும் படித்த பெண்களை திருமணம் செய்து தங்களது காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படித்த பெண்களை தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு மத்தியில் அந்த மருமகள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த சீரியலின் கதையாக நகருகிறது.

இந்த சீரியலில் கொடூர வில்லனாக காணப்படும் ஒரு கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன். தனது மகள் மற்றும் மனைவிக்கு துரோகம் செய்யும் கொடூர  மனம் படைத்த ஒருவராக இவர் காட்டப்படுகிறார்.

கடந்த சில மாதங்களாக தர்ஷினி கடத்தல் தொடர்பான எபிசோடுகள் அரங்கேறி வருகிறது. பள்ளியில் இருந்து மர்ம நபர்கள் தர்ஷினியை கடத்திவிட, அனைவரும் அவரை தேடி அலைகிறார்கள். அந்த நேரத்தில் பெண்கள் அனைவரும் துணிந்து தர்ஷினி தேடி செல்கிறார்கள்.


ஆனால் தர்ஷினியை கடத்தியது அவளது அம்மா ஈஸ்வரி தான் என்று, ஆதி குணசேகரனும் விஷாலாட்சியும் சொல்ல, பிரச்சனை இன்னும் பெருசாகிறது.

இதை தொடர்ந்து அண்ணனுக்கு சாதகமாக இருந்த கதிர், ஞானம் ஆகியோர்  அவருக்கு எதிராக திரும்பி,  அடுத்தடுத்த காட்சிகளை பராபரப்பாக கொண்டு சென்றார்கள்.

மறுபக்கம் குழந்தையை கடத்திய வழக்கில் நான்கு பெண்கள் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரை போலீசார்  கைது செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தர்ஷினியை கடத்தியது அவருடைய அப்பா குணசேகரன் தான் என ஜீவானந்ததிற்க்கு தெரிய வர, ஒரு வழியாக தர்சினியை காப்பாற்றி விடுகிறார்.


அதன் பின் தர்ஷினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒன்றுமே தெரியாதவர் போல நாடகமாடுகிறார் குணசேகரன். சிறை சென்ற ஈஸ்வரிக்கும் ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஆனால் தர்ஷினியை  ஈஸ்வரி பார்க்கக் கூடாது என நீதிமன்றத்தில் ஆடர் வாங்குகிறார் குணசேகரன்.

இந்த கடத்தில் சம்பவத்திலிருந்து தர்ஷினி இன்னும் மீளாத நிலையில், தான் தர்ஷினியை திருமணம் செய்து கொள்வதாக கரிகாலன் முயற்சிக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை இன்னும் பெரிதாகிறது. மேலும், கரிகாலன் தான் என் மாப்பிள்ளை, என் மகளை அவனுக்குத்தான் கட்டிக் கொடுப்பேன் என சொல்கிறார் குணசேகரன்.

இவ்வாறு எதிர்நீச்சல் சீரியல் தற்போது தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பெற்ற பிள்ளையை அப்பாவே  கடத்தி வைத்துக்கொண்டு அம்மா தான் கடத்தினார் என்று நாடகமாடுவதாலும், ஜாமில் வந்த ஈஸ்வரியை, தர்சினியை பார்க்க விடாமல் அவர்கள் செய்யும் கொடுமைகளையும் பார்த்து ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

மேலும், பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற எதிர்மறையான காட்சிகளையும் இந்த சீரியல் காட்டுவதால் எதிர்நீச்சல் சீரியல் மீது ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement