• Apr 01 2025

இது ஒத்த செல்ஃபி இல்ல, லட்ச செல்ஃபி..!! கேரளா ரசிகர்களின் வெள்ளத்தில் தத்தளித்த விஜய்! போட்டோஸ், வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது அடுத்த படப்பிடிப்பானது கேரளாவில் உள்ள திருவந்தபுரத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற காவலன்  திரைபடத்தின் படப்பிடிப்பின் போது கேரளா சென்ற விஜய்க்கு, கேரளா ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து இருந்தனர்.

தற்போது 14 வருடங்கள் கழித்து தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற விஜய்க்கு, அதை விட பலமடங்கு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தது.

நடிகர் விஜய் நேற்றைய தினம் விமான நிலையத்தை வந்திறங்கியதை அடுத்து, கேரளா ரசிகர்கள் அவரை சூழ்ந்த நிலையில், சற்று நேரம் போக்குவரத்து கூட ஸ்தம்பித்து காணப்பட்டது.


இதை அடுத்து விஜயின் கார் கூட கூட்ட நெரிசலில் சிக்கி முன்பக்கம், பின்பக்கம் என நொறுக்கப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கும் வகையில் வழமை போல வாகனம் ஒன்றின் மேல் ஏறி செல்பி எடுத்துள்ளார். இருட்டில் அவர் எடுத்த செல்பி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement