• Apr 24 2025

ஜீ தமிழ் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை! இனி அவருக்கு பதில் யாரு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவை தான் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி. 

விஜய் டிவி, சன் டிவி சீரியல்களை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியும் சீரியலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெறும் மாரி, அண்ணா, கார்த்திகை தீபம் போன்றவை மிகவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல்களாக உள்ளன.


இந்த நிலையில், அண்ணா சீரியலில் நான்கு தங்கைகளில் ஒருவராக வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்சு சுந்தரம், தற்போது அண்ணா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கும் அண்ணா சீரியலில் நாயகியாக நித்தியா ராம் நடித்து வருகிறார். நான்கு தங்கைகளின் கனவை நிறைவேற்றி அவர்களை பாதுகாக்கும் அண்ணனான சண்முகம், அவர்களை எப்படி கரை சேர்க்கிறார் என்பதுதான் இந்த சீரியல் கதை. 


இவ்வாறான நிலையில், இந்த நான்கு தங்கைகளில் ஒருவரான வீரா  கதாபாத்திரத்தில் நடித்த தர்சு சுந்தரம் விலகவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர் கௌரி இனி  கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







 

Advertisement

Advertisement