• Jan 18 2025

அட்ரா சக்க..!! மைக்கல் ஜாக்சனின் பயோபிக் விரைவில்.. கமிட்டான மாஸ் ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு நபராக காணப்படுவர் தான் மைக்கல் ஜாக்சன். அந்த அளவிற்கு அவர் மிகப்பெரிய நடன கலைஞராகவும், பாடகராகவும் திகழ்ந்து வந்தார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தவர் தான் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். அவரது குடும்பத்தில் ஜாக்சன் எட்டாவது குழந்தை. 

மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த மைக்கல் ஜாக்சன், இன்று உலகமே போற்றும் மாபெரும் கலைஞனாக மாறியுள்ளார். அதற்கு அவருடைய நடனம் தான் முக்கிய காரணம்.

மைக்கேல் ஜாக்சனுக்கு ஆறு வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தை ஆரம்பித்த ஒரு பேண்டில் இணைந்து பாடல்களை பாட ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே அவருடைய உருவத்திற்காகவும், நிறத்திற்காகவும் பெரிய அளவில் உருவ கேலி செய்யப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன்.

Advertisement

Advertisement