• Jan 19 2025

போயஸ் கார்டனில் பெண் கொடுத்தா அசிங்கப்படுத்துவீங்களா? ரகசியம் உடைத்த பிரபலம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்களது பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன், எதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் இருவரும்  விவாகரத்துக்கோரி நீதி மன்றத்தில் மனு போட்டுள்ளனர்.


இந்த நிலையில், தற்போது போயஸ் கார்டனில் பெண்ணெடுத்த தனுஷ் குடும்பம் அந்த அளவுக்கு வசதி இல்லைன்னு ஏளணம் செய்துள்ளார்களாம் ரஜினி தரப்பினர். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டி தன் தந்தை மற்றும் தாயாரை அங்கே குடியிருத்தியுள்ளார் நடிகர் தனுஷ் என்று செய்யாறு பாலு புதிய வீடியோவில் பேசியுள்ளார்.


மேலும்,  தனுஷ் கஷ்டப்பட்டு தான் தன் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தார். தனுஷ் திருமணத்தின் போது பலரும் இழிவாக பேசினர். சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட விசாகன் குடும்பம் வசதியான குடும்பம். ஆனால், போயஸ் கார்டனில் பெண்ணெடுத்த தனுஷ் குடும்பம் அந்த அளவுக்கு வசதி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement