• Jan 18 2025

"வேட்டையன்" படத்தின் டப்பிங் பணிகள் தீவிரம் ,சம்பவம் உறுதி !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான "வேட்டையன்" இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31 இல் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாவதாக செய்திகள் வெளியாகியிருக்க நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

Fahadh Faasil Birthday: Vettaiyan ...

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்  டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைத்திருக்கும் இப் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும்  ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

படம்

"வேட்டையன்" படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ரித்திகா சிங் தனது காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளில் இருக்கும்  புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்.இதை பார்வையிட்ட ரசிகர்கள் சம்பவம் உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement