• Aug 15 2025

மலர்களுக்கு நடுவே நம்ம மலர் டீச்சர்,சாய் பல்லவி பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

2015 இல் வெளியான மலையாள திரைப்படமான "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் எனும் பாத்திரத்தில் தோன்றி மலையாளம் தாண்டி இந்திய அளவில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி.மருத்துவ பட்டதாரியான சாய் பல்லவிக்கு பிரேமம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்தன.


தமிழில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டாலும் அதையும் தாண்டிய பாராட்டை அவரது நடனம் வாங்கி செல்கிறது.இன்றளவும் பேசப்படும் "மாரி 2"  இன் ரௌடி பேபி பாடல் யூடியூபில்  100 மில்லியன் பார்வையை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற அந்தஸ்தை பெற்றது.


சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நடிகை சாய் பல்லவி சற்று முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்."ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முந்தைய படங்கள் ஆனால் காலை பனி போல புதிய நினைவுகள் ! " என்ற பதிவுடன் சாய் பல்லவி பகிர்ந்த இப் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் 'மலர்களுக்கு நடுவே நம்ம மலர் டீச்சர்'  என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement