• Feb 22 2025

மருமகள் பெயரை பச்சை குத்திய 96 திரைப்பட நடிகர் குட்டி ராம்! வைரலாகும் புகைப்படம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் 96 திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தில் இளம் வயது ராம் ஆக நடித்து ரசிகர்களின் பாராட்டினை பெற்றார். இந்நிலையில் தனது அக்கா பொண்ணு பெயரை பச்சை குத்தி பொங்கலுக்கு சப்ரைஸ் பண்ணியுள்ளார். 


எம்.எஸ். பாஸ்கரின் மகன் என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்த ஆதித்யா ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தனது சகோதரி ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில், மருமகளின் பெயரை தாய் மாமன் பச்சைக் குத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 


தனது சகோதரி ஆதித்யா பாஸ்கருக்கு திருமணமாகி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அகீரா என பெயர் வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது மருமகளின் பெயரை தனது மார்புக்கு கீழே அகீரா என்று பச்சைக் குத்திக் கொண்ட ஆதித்யா பாஸ்கர் அந்த டாட்டூவை காட்டியபடியும் மருமகளை கையில் வைத்து கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். "என்னோட மருமகள் இதை படித்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பின்னர் என்ன ரியாக்ட் பண்ணுவான்னு பார்க்க ரொம்பவே ஆர்வமாக உள்ளேன்" பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement