சினிமா உலகில் சில இயக்குநர்கள் அவர்களின் திறமையாலும், தனித்துவமான பார்வையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்குநரான மிக்ஸின், தனது புதிய படம் ‘Dragon’ ப்ரி-ரிலீஸ் விழாவில் கதைத்த நேர்காணல் ஒன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மிஸ்கின் அதில் கூறுகையில், "விரைவில் சினிமாவை விட்டு வெளியேறப் போகும் இயக்குநர் நான் தான்" என தெரிவித்திருந்தார். அது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ‘Dragon’ திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன்-திரில்லர் படம். மிக்ஸின், தனது இயக்கத்தில் எப்போதும் சமூக கருத்துக்களை ஒரு வித்தியாசமான முறையில் சொல்வார் என்பதால், இந்த படத்திற்கும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
அப்படி இருக்கையில் மிஸ்கின் திடீர் என இப்படி ஒரு முடிவெடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அவர் "இந்தத் துறையில் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி புதிய பாதையில் பயணிக்க விரும்புகிறேன்" என்றார். மேலும் “சினிமா என்பது என் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம். ஆனால் வாழ்க்கையில் நாம் சில மாற்றங்களை தேட வேண்டும். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று உணர்ச்சிப் பூர்வமாக தெரிவித்தார். எனினும் dragon படம் வெற்றி பெற்றால் மிஸ்கின் இந்த முடிவை மாற்றிக்கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!