சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ஸ்ருதிக்கு கார் டிரைவராக மீனாவை வைக்குமாறு விஜயா சொல்ல, அவருக்கு தகுந்த பதில் அடி கொடுக்கிறார் ஸ்ருதி. அதன் பின்பு மனோஜிடம் முத்து எல்லா விஷயத்தையும் விசாரித்து பண்ணுகிறான் அதுபோல நீயும் இரு என்று அட்வைஸ் பண்ணுகிறார் ரோகிணி.
இதைத்தொடர்ந்து சீதா தனது நண்பியின் பைக்கில் வரும்போது அங்கு அருண் அவரை மறிக்கின்றார். இதன் போது சீதா அம்மா எப்படி இருக்கா? என்று விசாரிக்க, தான் இப்போது டியூட்டியில் இருப்பதாக சொல்லி ஹெல்மெட் போடாததற்கு பைன் கேட்கின்றார். மேலும் சீதாவின் பைனை அருண் கட்ட செல்ல, கீதா கோவத்தில் வேண்டாம் நான் தானே பிழை விட்டேன் நானே கட்டுகிறேன் என்று பைனை கட்டி செல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் அண்ணாமலை வீட்டுக்கு வந்த அவருடைய நண்பரான பரிசு, தனது இரண்டாவது மகள் காதலித்து வீட்டை விட்டு ஓடி போனதாக சொல்லி அழுது ஒப்பாரி வைக்கின்றார். இதனால் அண்ணாமலை முத்து எப்படியும் தேடு கண்டுபிடித்து விடுவான் அழாதே என்று அவருக்கு தைரியம் சொல்லுகின்றார்.
அது போலவே முத்துவும் மீனாவும் பவானி வேலை செய்த கடைக்குச் சென்று அங்கிருந்த பெண்ணிடம் தங்கள் சிஐடி ஆபிஸர் என்று மிரட்டி உண்மையை வாங்குகின்றார்கள். இதனால் பவானி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இன்னொரு நண்பர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக உண்மையை சொல்லிவிடுகிறார்.
இறுதியாக பரசு வீட்டுக்கு சென்ற முத்து, நீங்க கவலைப்பட வேண்டாம் அவங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. எப்படியும் அவங்களை அழைத்து விட்டு வருவோம் என்று நம்பிக்கை கொடுக்கின்றார். அதேபோல பையன் வீட்டு பக்கம் சார்பாக பிரவுன் மணியிடம் இந்த பிரச்சனையை சொல்லுகின்றார்கள். அவரும் இதை தீர்த்து வைப்பதற்காக முடிவு கட்டியுள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!