• Feb 22 2025

மகளுடைய மரணம் என்பது ஒரு அப்பாவால் நிச்சியமாக தாங்க முடியாத ஒன்று... கண்ணீர் மல்க நடிகர் பார்த்திபன் இரங்கல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார். கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 


இன்று அவரின் உடல் தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர் அப்போது நடிகர் பார்த்திபன் இவ்வாறு மனமுடைந்து கதைத்திருந்தார். 


இறந்ததிற்கு பிறகு என்ன பேசுறது என்று தெரிய இல்ல இப்படியான நிகழ்வு அடிக்கடி நடனத்திற்கு இருக்கு. ஒரு மகளின் மரணம் ஒரு அப்பாவால் கண்டிப்பா தாங்க முடியாது. எனது மகளின் சின்ன உடல் நோய் கூட தாங்க முடியவில்லை இப்படி ஒரு மரணம் தாங்கமுடியாத சோகம் தான் அத வெளியில சொல்ல முடியாது. யாருக்காவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே நடவடிக்கை எடுங்க சிகிச்சை எடுத்துக்கோங்க இந்த மாதிரியான இழப்புகளை தாங்குற சக்தி குடும்பத்தினருக்கு இல்லை.      

Advertisement

Advertisement