• Jan 18 2025

பண பெட்டியை எடுத்துட்டு ஓடிறலாம்னு தோணிச்சி... இந்த ஒரே காரணம் நாளத்தான் நான் எடுக்க இல்ல... அர்ச்சனா பகிர் பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பது சிறப்பான விடயம் ஆகும். அப்படிபட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. குறித்த நிகழ்ச்சி 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட மேடையில் அறிவிக்கப்பட்டார்.


இந்நிலையில் அவர் தற்போது பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது. "நான் பண பெட்டியை எடுக்குற பிளான்லதான் இருந்தன். ஏன்னா சரியான மாதிரி டிப்ரஷன்ல இருந்தேன் முடியல்ல என்னால போட்டியா கண்ணால பாத்துட்டுட்டும் நான் யோசிச்சிட்டு இருந்தேன். இங்க எந்த பக்கம் போனாலும் அடிக்கிறாங்க அதுனால எப்படியாவது தப்பித்து வெளிய போயிறலாம்னு நினச்சேன். 


ஆனால் என் வாழ்க்கைல முதல் முறையா என் தங்கச்சி என்ன கட்டி பிடித்து முத்தம் கொடுத்து ஒரு விடயம் கேட்டிருக்கா" தயவு செய்து பெட்டியை எடுக்க வேணாம்" என்று அதையாவது செய்வம் என்று தான் அந்த பெட்டியை எடுக்க இல்ல ஓகே என்று விட்டுட்டன் என்று கூறி உள்ளார் அர்ச்சனா.   

Advertisement

Advertisement