• Sep 16 2024

முதல் நாளிலேயே கோடிகளை அள்ளிய கோட்.. ஆனாலும் லியோ தான் கிங்கு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிக்கும் படம் என்றாலே அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படும். அத்துடன் அதிலுள்ள பாடல்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

அதன்படி இளைய தளபதி விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் கேமியோ ரோடில் நடித்துள்ள காட்சிகளை பார்த்த ரசிகர்கள் திரையரங்கை அதிர வைத்திருந்தனர்.

இவ்வாறு கோட் படம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் அதிகளவானோர் பாசிட்டிவ் விமர்சனங்களை தான் அளித்து வருகின்றார்கள்.


கடந்த வருடம் அட்லீ தயாரிப்பில் விஜய் நடித்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது. 

இந்த நிலையில், கோட் திரைப்படம் முதல் நாளிலேயே 126.32 கோடிகளை வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

எனினும் லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருந்தது. அதனை கோட் படத்தினால் முறியடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement