• Apr 26 2024

களவாக இணையத்தில் கசிந்த 'ஆதிபுருஷ்' ட்ரெய்லர்... கடும் அதிர்ச்சியில் படக்குழு..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தற்போது 3டி-யில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்  'ஆதிபுருஷ்'. அதாவது ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு பாராட்டத்தக்க வகையில் உருவாகியுள்ள இந்த படம், அடுத்த மாதம் 16ம் தேதி வெளியாக உள்ளது.


மேலும் இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளதால் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1.53 மணியளவில் ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகும் என அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் நேற்று குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் படத்தின் டிரெய்லர், சிறப்பு திரையிடல் மூலம் காண்பிக்கும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த யாரோ ஒரு நபர் படத்தின் முழு டிரெய்லரையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 


இவ்வாறாக திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்த ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை, சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் பணியில்  படக்குழு தீவிரமாக தற்போது ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement