• May 29 2023

இதுதான் உன்னை வைத்து நான் எடுக்கிற கடைசி படம்... கடுங்கோபத்தில் கமலைத் திட்டிய பாரதிராஜா..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்தளவிற்கு ஒரு சில இயக்குநர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வாறாக சிறந்த கதை இயக்கத்தின் மூலமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒருவர் தான் பாரதிராஜா.


இயக்குநராக பணியாற்றி வந்த பாரதி ராஜா சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். மேலும் இவர் தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் ரஜினி, கமலை வைத்து 16 வயதினிலே என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கமலுடன் சிவப்பு ரோஜாக்கள், கைதியின் டைரி ஆகிய படங்களிலும் இணைந்து பணியாற்றினார் பாரதிராஜா. இதில் கைதியின் டைரி என்ற படத்தின் கிளைமேக் காட்சி எடுக்கும் போது கமலுக்கு ஏதோ பாரதிராஜ மேல் பயங்கர கோபமாம்.


இதனால் படப்பிடிப்பிற்கு கமல் வராமல் இருக்க, பாராதிராஜா கமலை உடனே அழைத்து வாருங்கள் கிளைமேக்ஸ் எடுக்க வேண்டும் என்றாராம். அதன் பின்னர் கமல் வர, கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்த பாராதிராஜா இது தான் உன்னை வைத்து நான் இயக்கிய கடைசி ஷாட் என்று சொல்லி விட்டு கோபமாக சென்றதாக சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் ஓப்பனாக பாராதிராஜா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement