• Jan 19 2025

நானி தயாரிப்பில் நடிக்கத் தயாரான தெலுங்கு நடிகர்..! எதிர்பார்ப்பை கிளப்பும் போஸ்டர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி இதுவரை 156 படங்களில் நடித்து பிரபலமாக காணப்படுகின்றார். இவர் 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தில் 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார்.

மல்லிடி வசிஷ்டா இயக்கிய 'விஸ்வம்பரா' திரைப்படம் எதிர்வரும் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது..இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

d_i_a

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி உள்ளது. இப்படத்தை தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ளார். 


மேலும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் இந்தப் படத்தை நானி தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி பகிர்ந்து உள்ளார்கள். 

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம். தற்போது நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement