• Feb 23 2025

நடிகை அபர்ணாவின் அப்பா போட்ட கண்டிஷன்! இந்த படம் மட்டும் போதும்! என்ன காரணம் தெரியுமா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், 2017 -ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.


'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். இப்படத்தில் அபர்ணா சிறப்பாக நடித்திருந்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் தற்போது  'ருத்ரம்' திரைப்படத்தில் நடித்துள்ளேன். இப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் முதல் முறையாக ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பல முன் பயிற்சிகளை எடுத்து கொண்டேன். அந்த காட்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்து பார்ப்பேன். 


அதற்கு என் அப்பா உதவி செய்வார். பயிற்சி முடிந்த பின்னர் என் தந்தை என்னிடம் இந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும், இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார் என சிரித்துக்கொன்றே கூறியுள்ளார் அபர்ணா. 

Advertisement

Advertisement