பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பலமொழிகளில் நடைபெற்று வருகின்றது. அதிலும் இந்தியில் 15 சீசனுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. விரைவில் எட்டாவது சீஷனும் ஆரம்பமாக உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முதலாவது சீசனில் இருந்து தற்போது வரையில் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை முதலாவது சீசனை ஜீனியர் என்டிஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு நாகார்ஜுனா தான் வெற்றிகரமாக தற்போது வரையில் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதற்காக கடந்த சீசனில் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நாகர்ஜுனா, விரைவில் ஆரம்பமாக உள்ள எட்டாவது சீசனில் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை தமிழ் ஹீரோ ஒருவரை போட்டியாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளார்கள் .
அந்த ஹீரோ வேற யாரும் இல்லை நடிகர் அப்பாஸ் தான். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக கொடி கட்டி பறந்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதுதால் சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆனார்.
இவர் கடந்த ஆண்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக பேச்சுகள் அடிபட்டது. தற்போது தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!