• Jan 19 2025

தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா? பிக் பாஸ் ஜனனியை எக்குதப்பாக வர்ணிக்கும் பேன்ஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் உள்ள தமிழ் செய்தி ஊடகம் ஒன்றில் பணி ஆற்றியவர் தான் ஜனனி. அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே சென்னைக்கு வந்து தனது கனவை நோக்கி செயற்பட்டு வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது அதில் வயது குறைந்தவர் இவர்தான் என்பதால் இவர் ஒரு பச்சிளம் குழந்தை போலவே பார்க்கப்பட்டார். இவரது அழுகை, சிணுங்கல், சிரிப்பு என்பன பலராலும் ரசிக்கப்பட்டன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவர் விஜய்- திரிஷா நடித்த லியோ படத்தில் நடித்தார். முதலாவது படமே இவருக்கு பெரிய படமாக அமைந்தது பலராலும் பாராட்டப்பட்டது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிக் பாஸ் ஜனனி, அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழமையாக கொண்டுள்ளார். இவர் ஏனைய நடிகைகளை போல் அல்லாமல் கவர்ச்சி காட்டாமல் நாகரிகமாகவே தனது உடைகளை அணிந்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது முத்து படத்தில் வரும் தில்லானா தில்லானா பாடலுக்கு அழகான ஆடையில் க்யூட் ரியாக்ஷன் கொடுத்துள்ளார் பிக் பாஸ் ஜனனி. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement