• Aug 12 2026

100 கோடியை எளிதில் நெருங்கிய ராயன்..! பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களில் அசுர வேட்டை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சுமார் 30 கோடி செலவில் பிரம்மாண்டமான செட்கள்  அமைக்கப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தனுஷ் இயக்கிய இரண்டாவது படமாகும். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளோடு படமாக்கப்பட்ட ராயன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், மூன்று நாட்களின் முடிவில் ராயன் திரைப்படம் உலக அளவில் சுமார் 75 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம் .

தெலுங்கில் ரூ.7.5 கோடியும், இதர இந்தியாவில் 10 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 20 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது .  


Advertisement

Advertisement