• Jan 19 2025

அனாதை குழந்தைகளை விக்கிறாங்க.. ஆனால் அரெஸ்ட் பண்ண முடியாது! தனது மாமியார் பற்றி போட்டுடைத்த சுசி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவர் தான் சுசித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், சுச்சி லீக்ஸ் என்ற விவகாரத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகின. இது தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இந்த விவகாரத்திற்கு பிறகு சுசித்ரா ஆள் அடையாளமே இல்லாமல் காணாமல் போயிருந்தார்.

சிறிது காலத்திற்கு முன்புதான் மீண்டும் யூட்யுப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து மீண்டும் பழைய குப்பைகளை கிளறி  வருகின்றார். இதன் காரணமாக அவருடைய கணவர் கார்த்திக் குமார் மட்டுமின்றி தனுஷ், திரிஷா, ஹன்சிகா, அனிருத்,  ஹாலிவுட் நடிகரான ஷாருக்கான் உட்பட பலரை வெளுத்து வாங்கி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கார்த்திக் குமாரின் தாயார் பற்றியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்துள்ளார் சுசி .


அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய முதல் கணவரின் அம்மா சுத்த வேஸ்ட், அவர் உண்மையானவரே இல்லை. நிறைய பிராடு வேலை பார்த்துள்ளார். அனாதைக் குழந்தைகளை விற்கிறது உட்பட பல வேலைகளை செய்கின்றார். அதிலிருந்து அரசுக்கும் கட்டு ஒன்று போகின்றது. அதனால் அவரை கைது பண்ண முடியாது. 

ஓரினச்சேர்க்கையாளரான கார்த்திக் குமாரை நான் திருமணம் செய்து கொண்டதால் நான் ஏதோ அமுக்கப்பட்ட கோழி என்று அவர் நினைத்துக் கொண்டுள்ளார்.

வீட்டுக்குள் திருமணத்திற்கு எதிராக சண்டை போட்டுட்டு இருக்கிறது எனக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு தங்கச்சி இருக்கா அவருக்கு கல்யாணம் ஆகணும். அவளோட எதிர்காலம் கெடக் கூடாது என்பதற்காக நான் இவ்வளவு நாளா நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடாமல் இருந்தேன். 

ஆனால் இன்றைக்கு எனது தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு. வேறு பிரச்சினை எனக்கு இல்லை அதனாலதான் நான் இப்படி தைரியமா பேசுறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement