• Sep 08 2024

சூர்யா ஒரு பச்சோந்தி.. அவருடைய பாலிசியால் மும்பையில் ஓடி ஒளிந்துள்ளார்! வெளுத்து வாங்கிய பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் நடிகர் சூர்யாவுக்கு என்று தனியிடம் காணப்படுகின்றது. வித்தியாசமான கேரக்டர்களில் வித்தியாசமான கெட்டப் போட்டு நடிப்பதில் கைதேர்ந்தவராக காணப்படுகிறார்.

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியிருந்தார். அதற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்திருந்தது. அதற்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் அதிலிருந்தும் வெளியேறினார். தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஒவ்வொருவரும் இடம், பொருள், ஏவல் தெரிந்து அதற்கு ஏற்ற போல தம்மை மாற்றி நடந்து கொள்வார்கள். ஆனால் நல்லவர் போல் ஒரு முகத்திரையை போட்டு அதற்குப் பிறகு பொய் முகத்தை காட்டும் பிம்பம் போல் செயல்படுவது பச்சோந்தி. ஏனென்றால் அதுதான் சூழ்நிலைக்கேற்ப நிறத்தையும் குணத்தையும் மாற்றிக் கொள்ளும். அதேபோலத்தான் நடிகர் சூர்யாவும் மாற்றிக் கொண்டு வருகிறார் என வலைப்பேச்சு அந்தனன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறுகையில்,  நல்ல கருத்துக்களை எந்த பயமும் இல்லாமல் தட்டிக்கேட்டு நிஜ வாழ்க்கையில் ஹீரா போல சில சமயங்களில் சூர்யா கொந்தளித்து இருக்கின்றார். ஆனால் அதே தப்பு மறுபடியும் நடக்கும் போது எந்த சம்பந்தமும் இல்லாதது போல ஒதுங்கி இருக்கின்றார்.

உதாரணத்திற்கு நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆக்ரோஷமாக பொங்கி இருந்தார் சூர்யா. அது தொடர்பில் அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் புட்டு புட்டு வைத்து அந்த ஆட்சிக்கு எதிராக செயல்பட்டார்.


ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நீட் தேர்வு பிரச்சினையால் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதை சூர்யா வேறு விதமாக திசை திருப்பி அடக்கி வாசித்து மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கடந்த காலத்தில் கட்சியை சுட்டிக்காட்டிய சூர்யா, தற்போது மாணவர்களின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் விதமாக பேசிவிட்டார். காரணம் திமுக ஆட்சியில் இருக்கும்போது எதுவும் பேசக்கூடாது என்பதற்காகவே அவர் அடக்கி வாசிக்கிறார்.

அவர் திமுக ஆட்சியில் அடக்கி வாசிக்கின்றார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பொங்குகிறார். இந்த பாலிசியில் தான் அவர் இருக்கின்றார்.

மேலும் இப்போது இங்கே அவருடைய பேச்சு பலிக்காது என்ற காரணத்தால் மும்பைக்கு ஓடி ஒளிந்து விட்டார். அத்துடன் ஹிந்தி வேண்டாம். தமிழை விட இந்த மொழியும் சிறந்தது இல்லை என்று பேசிய அவர், மும்பையில் செட்டில் ஆகும் படி அங்கேயே தஞ்சம்  அடைந்து விட்டார். இவ்வாறு சூர்யா அடிக்கடி அவரது குணத்தை பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கின்றார் அன்று விமர்சித்துள்ளார் வலைப்பேச்சு அந்தணர்.

Advertisement

Advertisement