திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சூரி, நடிப்பிலும், காமெடியிலும் தனித்துவமானவர். அவரது நடிப்பில் எளிமையையும், உண்மையையும் பார்க்க முடியும். சமீபத்திய நேர்காணலில், அவர் சூர்யாவின் சமூக சேவை, கல்வி மேம்பாடு மற்றும் அகரம் பவுண்டேஷன் பற்றிய உணர்வுகளை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

சூரி தனது பேட்டியில், “ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோவில் இருக்குனு சொல்லுவாங்க. ஆனா, எல்லாருக்கும் ஒரு கோவில் இருக்குன்னா அது அகரம் பவுண்டேசன் தான்” என்று குறிப்பிட்டார்.
அகரம் பவுண்டேஷன், சிறந்த கல்வி மேம்பாட்டு அமைப்பாக விளங்குகிறது. சூரி மேலும், “ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு படிப்பை கொடுத்து, இன்னக்கி அவ்ளோ பேர் என்ஜினியரா இருக்காங்க, டாக்டரா இருக்காங்க… அத்தனை பேர் வாழ்க்கையில சூர்யா ஒளி ஏத்தி வைச்சிருக்கிறாரு.” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம், பவுண்டேஷன் நிறைவேற்றிய கல்வி மற்றும் சமூக சேவை முயற்சிகள், பல மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சாதாரண குடும்பத்தினர் முதல் ஏழை மக்கள் வரை, அகரம் பவுண்டேஷன் அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது.
Listen News!