• Dec 17 2025

மோகன்லாலை பொன்னாடை போர்த்தி வாழ்த்திய நடிகர் மம்முட்டி.! எதற்காகத் தெரியுமா.?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

மலையாளத் திரையுலகின் இரு மாபெரும் நட்சத்திரங்கள் ஒரே படத்தில் சந்திப்பது என்பது ரசிகர்கள் காத்திருந்த ஒரு தருணமாகும். கடந்த மாதம் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு, தனது சக நடிகர் மம்முட்டி பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அசத்தலான நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் “பேட்ரியாட்” படப்பிடிப்பு தளத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.


மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் மலையாள திரையுலகின் அசாதாரண சக்தி வாய்ந்த நட்சத்திரங்களாக விளங்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தனித்தனியாகவே நடித்து வந்த இவர்கள், “பேட்ரியாட்” படத்தின் மூலம் மீண்டும் ஒன்றாக நடிக்க இருக்கின்றனர். இதன் மூலம் இருவருக்கும் பெரும் ரசிகர் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


மோகன்லாலின் சமீபத்திய சாதனையை கொண்டாடி, மம்மூட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கினார். இந்த அங்கீகாரம், திரையுலகில் சக நடிகர்கள் இடையேயான நட்பு, மரியாதை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வு, ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக காணப்பட்டது. 

Advertisement

Advertisement