• Jul 05 2026

ரசிகர்களை அதிரவைக்கும் டைட்டில்.. – சூர்யா 45 படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது சமீபத்திய படங்களான கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகியவற்றில் எதிர்பார்த்த வெற்றியைத் பெறவில்லையெனினும், அவரது நடிப்பு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். சூர்யா தற்போது தொடர்ந்து இரண்டு முக்கியமான திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அவர் நடித்து வரும் சூர்யா 45 படத்திற்கான தலைப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது, அது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்றைய தினம் (ஜூன் 20, 2025), ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாள் என்பதையொட்டி, அவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடித்து வருவது உறுதியாகி இருக்கும் நிலையில், அந்தப் படத்தின் தலைப்பு “கருப்பு” என இன்று வெளியிடப்பட்டது. இதற்கமைய, பல நாட்களாக சமூக வலைத்தளங்களில் தலைப்பு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கும் இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement