• Aug 02 2025

யூடியூபர் விஷ்ணு கைது.! மனைவியின் புகாரால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய விவகாரம் ஒன்று தற்போது சினிமா மற்றும் டிஜிட்டல் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான விஷ்ணு, தனது மனைவியை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது காரணமாக விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விஷ்ணு, சமூக ஊடக வட்டாரத்தில் பல்வேறு பயனுள்ள மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். குறிப்பாக, வாழ்க்கை முறைகள் மற்றும் நகைச்சுவை கலந்த ஷார்ட் வீடியோக்கள் மூலம், இன்ஸ்டாகிராமிலும் யூடியூபிலும் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருந்தார்.

அவரது மனைவியான அஸ்மிதா, சில வருடங்களுக்கு முன் இவரை திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் இணையத்தில் இவர்களது ஜோடி "couple goals" என போற்றப்பட்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக, இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், மற்றும் பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் சமாளிக்க முடியாத நிலைக்கு சென்றதற்கான அடையாளங்கள் சில சமூக வலைத்தள வீடியோக்களில் வெளியாகின.


இதனைத் தொடர்ந்து அஸ்மிதா, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது கணவர் விஷ்ணு கடந்த சில மாதங்களாக பலவிதமான வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விருகம்பாக்கம் மகளிர் காவல் துறை, அஸ்மிதாவின் புகாரின் அடிப்படையில் விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Advertisement

Advertisement