• Jan 19 2025

நான் டாக்டராகி இருக்க வேண்டியவள்.. அம்மாவால் சூப்பர் சிங்கருக்கு வந்தேன்: பாடகி புண்யா

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நான் இந்நேரம் டாக்டராகி மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு நபர் என்றும் ஆனால் என்னுடைய அம்மாவால் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது பாடகி ஆகியுள்ளேன் என்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான புண்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து உள்ளார்கள் என்றும் சிலர் திரைப்படங்களிலும் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த புண்யாவுக்கு ஒரு கட்டத்தில் தனது படிப்பின் மீது வெறுப்பு வந்ததாம். அப்போது அவருடைய அம்மாவிடம் ஆலோசனை கேட்டபோதுதான் நீ ஏன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று கூறியதாகவும் அதை அடுத்து தான் எனக்கும் பாடுவதில் கொஞ்சம் விருப்பம் என்பதால் அதற்கு முயற்சி செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். 

சென்னை வந்து ஆறு மாத காலம் பயிற்சி எடுத்ததாகவும் சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக பிராக்டிஸ் செய்ததாகவும் புண்யா கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இனிமேல் என்னால் மருத்துவராக முடியாது என்று முடிவு செய்தேன், முழுக்க முழுக்க இனி பாடகி தான் என்னுடைய தொழில் என்பதையும் நான் முடிவு செய்தேன் என்று கூறிய புண்யா இப்போதும் சூப்பர் சிங்கர் தான் எனக்கு சோறு போடுகிறது என்றும் புதிதாக பாட வருபவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன் என்றும் இனி எப்போதும் நான் சூப்பர் சிங்கர் டீமில் தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அம்மா தான், என்னுடைய அம்மா இப்போது இல்லை என்றாலும் அவரால் தான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement