• Nov 22 2024

அட்ரா சக்க... சத்தமின்றி ரகசிய திருமணம் செய்தாரா நடிகர் சித்தார்த்..?? ட்விட்டரில் ட்ரெண்டிங்... உண்மை என்ன?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிக்கின்றன.

இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் அவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். பிரபல நடிகர் சித்தார்த் அவர்கள் நடிக்க துவங்கிய அதே ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றனர். அதன்பின்  பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரியுடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக அடிக்கடி தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாவதுண்டு.

அதனை வெளிப்படுத்தும் விதமாக அண்மையில் வெளிநாட்டில் இருவரும் நியூ இயரில் கட்டிப்படித்த படி எடுத்த போட்டோவை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோவிலில் வைத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைடாரியும் ரகசிய திருமணம் செய்து கொண்டாலும், கணவன் மனைவியாக அவர்களது முதல் திருமண படங்கள் கூட இன்னும் இணையத்தில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement