• Jan 18 2025

டிஆர்பியில் படு மோசமாக அடிவாங்கிய சன் டிவி சீரியல்! கடைசி நாள் எமோஷ்னல் காட்சி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இதில் ஒரு சீரியல் முடிவதற்கு முன்பே அடுத்த புது சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவிடும்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் மீண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றது. ஒரு நாள் கூட ரெஸ்ட் இல்லாமல் சன் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிப்பதற்காக சொதப்புகின்ற சீரியல்களை சீக்கிரமாகவே முடித்து அதற்கு பதிலாகவே புது தொடர்களை உடனடியாக களம் இறக்குகின்றார்கள்.


இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புது முகங்களுடன் ஒளிபரப்பாகி வந்த பூவா தலையா சீரியல் சமீப காலமாகவே டிஆர்பியில் அடி வாங்கியதால் அந்த சீரியலை மிதந்து கொண்டு வந்துள்ளார்கள். 

அதன்படி, பூவா தலையா சீரியல் 218 எபிசோடுகளுடன் இன்று அதிரடியாக முடிந்துள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் இந்த சீரியலும் கதையை கொஞ்சம் மாற்றி தொடரை திறந்து இருக்கலாம் என தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement