• Jan 26 2026

வள்ளுவர் கோட்டத்தில் குவியும் ரசிகர்கள்.. கண்காட்சியை நீட்டித்த சுதா கொங்கரா

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், தரமான படங்களையும் வழங்கி வரும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் ‘பராசக்தி’. இந்த படம், சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் 25வது திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்த படத்தை, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களின் Dawn Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. பெரிய பட்ஜெட்டிலும், தரமான தொழில்நுட்ப அம்சங்களோடும் உருவாகியுள்ள இப்படம், உள்ளடக்கம் மற்றும் காட்சியமைப்பில் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பராசக்தி’ படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து, அதர்வா, ரவி மோகன் (ஜெயம் ரவி), பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வலுவான நட்சத்திர கூட்டணி, படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், இப்படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். 


திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வழக்கமான ப்ரோமோஷனை விட வித்தியாசமாக, ரசிகர்களை நேரடியாக படத்தின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘#WorldOfParasakthi’ என்ற பிரம்மாண்ட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தொடங்கிய நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


இந்த நிலையில், பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா கண்காட்சி குறித்து ஒரு முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் அதன்போது, “சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் World Of Parasakthi கண்காட்சிக்கு மக்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த இந்த கண்காட்சியை, தற்போது இன்னும் சில நாட்கள் நீடிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு வருகிறோம்.” என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement