• Apr 15 2026

‘டாக்ஸிக்’ படத்தில் கியாரா அத்வானியின் அசத்தலான லுக்.! வெளியான போஸ்டர் படுவைரல்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக திகழ்ந்து வருபவர் யாஷ். ‘KGF’ திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற யாஷ், தற்போது தனது 19வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘டாக்ஸிக்’ (Toxic) என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


‘டாக்ஸிக்’ திரைப்படத்தை இயக்குவது, பிரபல நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ். இவர் இதற்கு முன்பு வித்தியாசமான கதைகளையும், உணர்வுபூர்வமான காட்சிகளையும் திரையில் வெளிப்படுத்தியவர். இந்த கூட்டணி, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘டாக்ஸிக்’ படத்தில் யாஷுடன் இணைந்து, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த திரைப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான KVN Productions தயாரித்து வருகிறது.


படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு, யாஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் நாயகியான கியாரா அத்வானியின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், கியாரா ‘நாடியா’ (Nadia) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement