தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரது 54வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாக தற்பொழுது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை அவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இவர் தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளும், வித்தியாசமான திரைக்கோணங்களும் கொண்ட படங்களை இயக்கி வருபவர். 54வது படத்தில் அவர் உருவாக்கிய கதை மற்றும் காட்சியமைப்புகள் தனுஷின் நடிப்புடன் சேர்ந்து சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தை தயாரிப்பது வேல்ஸ் நிறுவனம். படக்குழுவின் அறிவிப்பின்படி, இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ. மமிதா பைஜூ சமீப காலங்களில் தமிழ் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் பெயர் பெற்றார். தனுஷ்-மமிதா பைஜூ இணைப்பில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!